போலி ஆவணம் மூலம் உரம், பூச்சி மருந்து விற்பனை - 2 வங்கி அதிகாரிகள் கைது
ராமநாதபுரம்: போலி ஆவணம் தயாரித்து உரம், பூச்சி மருந்து போன்றவற்றை விற்பனை செய்த கூட்டுறவுத்துறை வங்கி முன்னாள் செயலாளர், எழுத்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது எம். புதுக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி.
இந்த வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம், பூச்சி மருந்துகளும், பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிமைப் பொருட்களும் போலி ஆவணம் மூலம் கள்ள சந்தையில் விற்கப்பட்டுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, இந்த வங்கியில் அதிகாரிகள் சோதனை செய்த போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம், பூச்சி மருந்துகளும், பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிமைப் பொருட்களும் போலி ஆவணம் மூலம் கள்ள சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம் கூட்டுறவு வங்கிக்கு 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, துணைப்பதிவாளர் ஞானசிவம் ராமநதாபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், எஸ்.ஐகள் அமுதசெல்வி, வெங்கடேஸ்வரி, ஏட்டுகள் மீராமுகைதீன், மாசானம், முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தி, வங்கியின் முன்னாள் செயலாளர் அழகுமலை, முன்னாள் எழுத்தர் தட்சிணாமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications