பாஜகவை ஜின்னா பிரித்துவிட்டார்-கருணாநிதி

ஜின்னா விவகாரத்தால் பாஜக கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஆளாளுக்கு சரமாரியாக கட்சித் தலைமையை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது பாஜகவுக்கு நல்லதல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதி தனது ஸ்டைலில் நச்சென்று கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக குழப்பம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இந்தியப் பிரிவினைக்கும், பாகிஸ்தான் உருவானதற்கும் ஜின்னா காரணமோ என்னவோ, ஆனால் இப்போது பாஜகவில் பிரிவினை ஏற்பட ஜின்னா காரணமாகி விட்டார் என்றார் கருணாநிதி.
இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களின் மோசமான நிலை குறித்த இன்னொரு கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், இந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்துமாறு மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடனும் எடுத்துச் சென்றுள்ளோம்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். தனது உறுதிமொழியை அவர் அமல்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் போய்ச் சேர்ந்துள்ளனவா என்ற கேள்விக்கு, அவை இலங்கைத் தமிழர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன என்றார் கருணாநிதி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications