சந்திரயான்-1 திட்டம் மாபெரும் வெற்றிதான் - கலாம்
பெங்களூர்: சந்திரயான்- 1 திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையே நமக்குப் போதிய அளவுக்கு ரிசல்ட் கிடைத்திருப்பதால் இது நிச்சயம் பெரிய வெற்றிதான் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
பெங்களூர் வந்த அப்துல் கலாமிடம் செய்தியாளர்கள் சந்திரயான்-1 திட்டம் வெகு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது குறித்து கேட்டனர்.
அதற்குக் கலாம் பதிலளிக்கையில், முதல் முறையிலேயே நமக்கு தேவையான முடிவுகள் கிடைத்துள்ளன. எனவே இது நிச்சயம் வெற்றிதான். சந்திரயான்-1 திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சந்திரயான்-1 வெற்றிகரமாக பூமியைச் சுற்றி வந்தது. பின்னர் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த பத்து மாதங்களாக அதில் இருந்த பத்து சாதனங்களும் தகவல்களை தொடர்ந்து அனுப்பி வந்தன. இவையெல்லாம் முக்கியமானவை.
மூன் இம்பாக்ட் பிராப் கருவியை சந்திரயான்-1 விண்கலத்திலிருந்து இஸ்ரோ வெற்றிகரமாக பிரித்தெடுத்தது இங்கு மிக முக்கியமானது. பின்னர் மூன் இம்பாக்ட் பிராப், நிலவில் இறங்கியது அதை விட மிகப் பெரிய வெற்றியாகும்.
இவையெல்லாம் சந்திரயான்-1 திட்டம் வெற்றிகரமானது, முழுமையானது என்பதை நமக்கு உணர்த்துகின்றன என்றார் கலாம்.
கஷ்டமான நிலை - மாதவன் நாயர்
இதற்கிடையே, சந்திரயான்- 1 திட்டம் எதிர்பாராத நிலையில் முடிவுக்கு வந்திருப்பதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது மிகவும் கடினமான நிலைமை. இப்போதைக்கு நாங்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டோம்.
என்ன தவறு நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதை எதிர்காலத்தில் சரி செய்ய முயற்சிப்போம்.
சந்திரயான்-1 திட்டம் மறுபடியும் தொடருமா என்பதை என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது என்றார் நாயர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications