கேல்ரத்னா விருது பெற்றார் மேரி கோம்- வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதளித்தார் பிரதீபா பாட்டீல்
கேல்ரத்னா விருது பெற்றார் மேரி கோம்- வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதளித்தார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், கேல்ரத்னா, அர்ஜூனா விருது உள்ளிட்டவற்றை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பெண் குத்துச் சண்டை வீராங்கனை மங்க்தே சுங்னிஜாங் மேரி கோம், ஒலிம்பிக் பகக்க வீரர்கள் சுஷில் குமார், விஜேந்தர் சிங் ஆகியோருக்கு உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது.
குத்தச்சண்டையில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். குத்துச் சண்டை வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கேல் ரத்னா விருதை தனது இரு குழந்தைளுக்கும் சமர்ப்பிப்பதாக மேரி கோம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மற்ற இரு குத்துச் சண்டை வீரர்களான விஜேந்தர் சிங்கும், சுஷில்குமாரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட 15 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
அர்ஜூனா விருது வாங்கியோரில் கெளம் கம்பீர் மட்டுமே கிரிக்கெட் வீரர் ஆவார்.
சாய்னாவின் பயிற்சியாரும், முன்னாள் பேட்மிண்டன் சாம்பியனுமான புல்லேல கோபிசந்த், இந்திய குத்துச் சண்டை அணியின் உதவிப் பயிற்சியாளர் ஜெயதேவ் பிஷ்த், சுஷில்குமாரின் பயிற்சியாளர் சத்பால் சிங் ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
இஷால் சிங் தியோல், சத்பீர் சிங் தாஹியா ஆகியோருக்கு தியான் சந்த் விருதும்,
ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது டாடா ஸ்டீல் நிறுவனம், ரயில்வே விளையாட்டு வாரியம் ஆகியவற்றுக்குக் கிடைத்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications