மே 17 முதல் அரசியல் இயக்கமாக மாறுவோம் - சீமான்
தூத்துக்குடி: நாம் தமிழர் அமைப்பு வரும் மே 17-ம் தேதி முதல் அரசியல் இயக்கமாக மாறும் என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார்.
இக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியதாவது:
என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் பேசி நமது நேரங்களை வீணடிக்க வேண்டாம்.
நமக்கு நிறைய கடமைகளும் பணிகளும் காத்திருக்கின்றன. எழுச்சிமிக்க இளைஞர் பாசறையாக இது செயல்படும். சீருடை இல்லாத ராணுவமாக நம் இயக்கம் செயல்படும்.
திராவிட இயக்கத்தின் பெயரைக் கூறி, இங்குள்ள அரசியல்வாதிகள் கட்சி நடத்தி வருகின்றனர். இங்கு யாரும் திராவிடன் அல்ல. இங்கு இருப்பது எல்லாமே தமிழன்தான். தமிழன் அல்லாதவர் கட்சித் துவங்கும்போது திராவிடம் தேவைப்படுகிறது.
இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கிறதா? தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை நடத்த இந்த அரசு தயாரா?
இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில்தான் ராணுவத்திற்கு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3 மாத காலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மவுனமாக இருக்கின்றனர். மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும்.
சிங்களன் ஒருநாளும் திருந்தமாட்டான். ஏனென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தியாவை சீண்டிப் பார்ப்பான். உலகத்திலேயே மிகப் பெரிய ராணுவத்தை தனியொரு மனிதனாக பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள் என்றார் சீமான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications