குஜராத்தில் லேசான நில அதிர்வு-2.8 ரிக்டர்
Subscribe to Oneindia Tamil
ஜாம்நகர்: இன்று காலை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 2.8 ரிக்டர் அளவு கொண்ட லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இது குறித்து காந்திநகர் பூகம்பவியல் நிறுவன இயக்குனர் பி.கே.ரஸ்தோகி கூறுகையில்,
இந்த நில அதிர்வின் மைய பகுதி ஜாம்நகரில் இருந்து சுமார் 15 கிமீ தென் கிழக்கில் உள்ள விஜாராகி கிராமத்துக்கு அருகே இருந்தது. காலை சுமார் 8.19 மணிக்கு அது உணரப்பட்டது. அது சில நிமிடங்கள் வரை நீடித்து என்றார்.
இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications