ஸ்வைன்: முசெளரியில் பெண் பலி - இதுவரை 102 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று இரவு பன்றி காய்ச்சலுக்கு புனேவில் இரண்டு பேரும், முசெளரியில் ஒருவரும் பலியானார்கள். இதையடு்த்து இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

பன்றி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு புனேவை சேர்ந்த அனில் நிகாம் என்ற 26 வயது வாலிபரும், விலாஸ் படாலே என்ற 42 வயது நபரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து புனேவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள முசெளரியில் ரூபினா என்ற 35 வயது பெண் டூன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

புனேவில் மேலும் 15 பேர் பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் சுமார் 128 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேத்தை சேர்ந்தவர்கள் 27 பேர். டெல்லி 22, தமிழகம் 21, கர்நாடகா 17, மேற்கு வங்கத்தில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,881 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+