ஒரு நம்பர் ஆன் லைன் லாட்டரி மோசடி - லாட்டரி அதிபர் சரண்
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஒரு நம்பர் ஆன் லைன் லாட்டரி சூதாட்டம் நடத்தியது தொடர்பாக அகில இந்திய லாட்டரி வியாபாரிகள் சங்கத் தலைவரும், மார்ட்டின் குழுமத் தலைவருமான உஸ்மான் பயஸ் உள்ளிட்ட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
திருமங்கலம் ஆலம்பட்டி பாய்ஸ் டவுன் எதிரில் ஒரு வீட்டில் ஆன்லைன் ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார், 16 பேரை கைது செய்தனர். மேலும் அதை நடத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த ஆன்லைன் லாட்டரி நிறுவனத்தை நடத்தி வந்ததாக கூறப்படும் உஸ்மான் பயஸ், பழனி என்ற பழனியப்பன், அண்ணாமலை ராமு ஆகியோர் கடந்த ஆஸ்ட் 18 ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர்.
இதனையடுத்து, திருமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெய்சிங் முன்னிலையில் சென்னை உஸ்மான் பயஸ், பழனி என்ற பழனியப்பன், அண்ணாமலை ராமு ஆகிய மூன்று பேரும் சரணடைந்தனர்.
அவர்களை திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு தினசரி நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீன் மற்றும் ரூ. 25 லட்சம் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கி அவர்களை நீதிபதி விடுவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications