ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு!

திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் தான், அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால், ராகுல் காந்தி அது போன்ற எந்த வித நிர்பந்தமும் இன்றி, அரசியலுக்கு வந்தவர்.
இன்றைக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட அரசியலில் குதித்து பதவிகளைப் பிடிக்க ஆசைப்படுகின்றனர். பல ஆண்டுக்கு முன்னரே ரஜினி ரசிகர் மன்றத்தினர், அரசியலில் இறங்க நினைத்தனர்.
ஆனால், அவர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள்.
அதே போன்று, பல நடிகர்களின் ரசிகர்களையும், இளைஞர் காங்கிரசில் சேர்க்க நாம் தீவிர முயற்சிக்கள் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்று பேர் வாங்க வேண்டும் என்றார்.
ரஜினி ரசிகர்களை அரசியல் அனாதைகள் என்று கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தவர் கார்த்தி சிதம்பரம் என்பது நினைவிருக்கலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications