நெல்லை தபால் அலுவலகத்தில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் தங்க நாணயம் விற்பனை
நெல்லை: நெல்லை தபால் அலுவலகத்தில் நேற்று ஓரே நாளில் சுமார் 6 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்கள் வி்ற்பனை செய்யப்பட்டன.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை தலைமை தபால் அலுவலகத்தில் இயங்கி வரும் பைனான்ஸ் மார்ட் மூலம் தங்க நாணயங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரை கிராம், ஒரு கிராம், 5 கிராம் அளவிலான தங்க நாணயங்கள் தபால் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் தங்க நாணயங்களுக்கு ஆறு சதவீதம் தள்ளுபடியை தபால் துறை அறிவித்துள்ளது. தள்ளுபடி விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை தபால் அலுவலகத்தில் தங்க நாணயங்கள் அனைத்தும் விற்று தீர்த்து விட்டன. ஒரே நாளில் சுமார் 325 கிராம் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன. விற்பனையான தங்க நாணயங்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.
ஓணம் தள்ளுபடி விற்பனை வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை நடக்கும் என நெல்லை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் குமாரசாமி, தபால அலுவலக அதிகாரி மீனா ஆகியோர் தெரிவித்தனர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications