கைதான தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு 2 சர்வதேச விருதுகள்
வாஷிங்டன்: கொழும்பு நீதிமன்றத்தால் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைப்புகள் விருது அறிவித்துள்ளன.
வடக்கு கிழக்கு ஹெரால்ட் என்ற இலங்கை மாதாந்தர இதழில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இன துவேஷம் ஏற்படும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதாக ஜெயப்பிரகாஷ் திசைநாயகம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த மே 3ம் தேதி நடந்த பத்திரிகையாளர் தினத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, திசைநாயகத்தை குறிப்பிட்டு அவரது துணிச்சலான எழுத்துக்களை பாராட்டினார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 30ம் தேதி கொழும்பு நீதிமன்றத்தால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் துணிச்சலுடன் இலங்கையில் நடக்கும் உண்மைகளை எழுதியதற்காக அவருக்கு பீட்டர் மேக்லர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை எல்லைகளற்ற ஊடகவியாளர்கள் என்ற அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த விருது வரும் அக்டோபர் 2ம் தேதி வாஷிங்டனில் வழங்கப்படும் என தெரிகிறது.
அதேபோல் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுக்கு திசநாயகத்தை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வரும் நவம்பரில் வழங்கப்பட இருக்கிறது.
தற்போது சிறையில் இருக்கும் திசநாயகம் சார்பில் இந்த விருதை யார் பெற்று கொள்வார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications