வங்கக் கடலில் அடர்ந்த காற்றழுத்தம்- புயல் எச்சரிக்கை

ஒரிசா மாநிலம் பாலசோருக்கு தென் கிழக்கே அடர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக நகர்ந்து இன்று பிற்பகல் 1 மணியளவில் வடக்கு மேற்காக, மேற்கு வங்க மாநிலம் திகா என்ற பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
இன்று மாலைக்குள் அது திகாவில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடற்கரைப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றும், கன மழை மற்றும் மிக பலத்த மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை லேசான மழை காணப்படும். சில இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் மேகமூட்டம் காணப்படும். காற்று வீசக் கூடும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைக் காற்று பலமாக இருக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களிலும், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!










Click it and Unblock the Notifications