4 பொறியியல் கல்லூரிகளில் சிபிஐ சோதனை-அங்கீகாரம் ரத்து?
நாகர்கோவில்: தமிழக்கத்தில் அடிப்படை வசதிகள் இன்றி லஞ்சம் கொடுத்து ஏஐசிடிஇ அனுமதி வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 4 பொறியியல் கல்லூரிகளில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது.
தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ நிபுணர்கள் குழுவுக்கு தெரியாமல் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடாக அனுமதி பெற்றதாக சிபிஐக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
மேலும், கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இது போன்ற புகார்கள் பல மாநிலத்தில் இருந்தும் வந்தன.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் அதிரடி சோதனைக்கு தயாரானர்கள்.
நேற்று அவர்கள் சென்னை கோயம்பேடு ஜேஏ என்ஜினீயரிங் கல்லூரி, அடையாளம்பட்டு பிஎம்ஆர் என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள விகேகே விஜயன் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நாகர்கோவில் சன் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், கல்லூரி நிர்வாகத்தினரின் வீடுகள், அவர்கள் நடத்தும் அறக்கட்டளை ஆகிய இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து கல்லூரி நிர்வாகிகளின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையில் ஒரு கல்லூரியில் கல்லூரி முதல்வர் பி.எச்.டி முடித்துள்ளதாக போடப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் அதற்கான சான்றிதழே இல்லை. இதே போன்று பல முறைகேடுகள் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ளன என சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு சொந்தமான மும்பை, புனே, மைசூர் நகரங்களில் உள்ள வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது.
நிபுணர்குழு பரிந்துரை இல்லாமலேயே நான்கு கல்லூரிகளும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மன்னர் ஜவஹர் கூறுகையில், ஏஐசிடிஇ அனுமதி ரத்தானால், அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய அங்கீகாரமும் ரத்தாகிவிடும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications