தூத்துக்குடி தனியார் மின் நிலையத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியை அருகே இந்து பாரத் எனர்ஜி லிமிடெட் என்ற தனியார் மின்சார உற்பத்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே இந்து பாரத் எனர்ஜி லிமிடெட் என்ற தனியாருக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகின்றது.
இங்கு விறகிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மின் தயாரிப்புக்காக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த விறகு மற்றும் கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ நிறுவனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இரவு நீண்டு நேரம் வரை போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டதாக அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications