கள்ளக் காதலி வீட்டு முன் இளைஞர் தற்கொலை
ஈரோடு: சத்தியமங்கலத்தில் கள்ளக்காதலி போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து மனமுடைந்த இளைஞர் ஒருவர் கள்ளகாதலியின் வீட்டின் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகரைச் சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இவர்களுடன் ஸ்டெல்லா மேரியின் தம்பி பிரான்சிஸ் (33) என்பவரும் வசித்து வந்தார்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வந்த பிரான்சிஸ்க்கும், சத்தியமங்கலம் ராஜன் நகர் அர்ச்சுணன் காலனியை சேர்ந்த மகாளி என்பவர் மனைவி சுப்பம்மாள் (50) என்பவருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சுப்பம்மாள் தனக்கு ரூ. 1 லட்சம் தேவை என பிரானசிஸிடம் கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று பிரான்சிஸ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த சுப்பம்மாள், பிரான்சிஸ் தன்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி மிரட்டுவதாக பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் மனமுடைந்து போன பிரான்சிஸ் சுப்பம்மாள் வீட்டின் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications