'லவ் ஜிகாத்'-தடுத்து நிறுத்த கோரும் விஎச்பி
ராமேஸ்வரம்: கேரளாவில் 'லவ் ஜிகாத்' திட்டம் மூலம் தீவிரவாதிகளால் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் உள்ள அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்து தராதது வேதனை தருகின்றது. அந்த முகாம்களை பார்க்க சென்ற ஐ.நா. பிரதிநிதிளை அனுமதிக்க மறுத்து இலங்கையில் இருந்து வெளியேற சொன்னது கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பல நூறுகோடி அளித்துள்ள மத்திய அரசு, அதை சரியான முறையில் இலங்கை அரசு பயன்படுத்துகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொண்டு இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும்.
கிராமக் கோயில் பூஜாரிகள் நலவாரியத்தில் 35,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் போதிய நிதி இன்றி கடந்த மூன்று ஆண்டில் 100 பேர் மட்டுமே பயன் பெற்றுள்ளனர்.
'லவ் ஜிகாத்' திட்டத்திற்காக தீவிரவாதிகளால் கேரளாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை தடுக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சபரிமலை மகரஜோதி, அலகாபாத், உஜ்ஜயினி, ஹரித்துவார் கும்பமேளா போன்ற திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்துதர முன் வரவேண்டும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications