இலங்கை அணி மீது தாக்குதல்:புலிகளுக்கு தொடர்பு- பாகிஸ்தான்

கடந்த மார்ச் 3ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூரில் நடந்த இந்த சம்பவத்தில் 7 இலங்கை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
முதலில் இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா தான் காரணம் என தெரிவித்த பாகிஸ்தான் தற்போது அப்படியே பழியை தூக்கி விடுதலை புலிகள் மீது போட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதரம யூசுப் ரசா கிலானி கூறுகையில்,
இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலை புலிகள் பண உதவி வழங்கியுள்ளனர். இது குறித்து லிபியாவில் நடந்த சந்திப்பின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தனக்கு சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
அப்போது நான் அவரிடம், இது தொடர்பாக நீங்கள் ஆதாரங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வதாக இருந்தால் உள்துறை அமைச்சக அதிகாரிகளை இலங்கைக்கு விசாரணை அனுப்புகிறேன் என தெரிவித்தேன். இந்த சம்பவத்தில் இரு நாடுகளும் இணைந்து உண்மையை கண்டறியும் என்றார்.
இலங்கை செல்லும் பாக். அதிகாரிகள்...
இதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணைக்காக இலங்கை செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் பிரதம அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பிரதமர் கிலானி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை இன்று சந்தித்து பேசினார். அப்போது உள்துறை அதிகாரிகள் சிலரை விசாரணைக்காக இலங்கை அனுப்ப கிலானி உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் இலங்கை செல்லும் அவர்கள் இந்த வழக்கு குறித்து கிடைத்த தகவல்களை பரிமாறி கொள்வார்கள் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications