6வது ஊதிய குழு-முரண்பாடுகளை நீக்க தமிழக அரசு கமிட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள 6வது ஊதிய குழு பரிந்துரையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை கண்டறிந்து நீக்க ஒரு நபர் கமிட்டி அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் ஆறாவது ஊதிய குழு பரிந்துரைத்துள்ளபடி திருத்திய ஊதிய விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு குழு அமைத்தது.

அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஊதிய விகிதத்திற்கு இணையான திருத்திய ஊதிய விகிதத்தை கொடுக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பல்வேறு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் திருத்திய ஊதியவிகிதங்களில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை களைய ஒரு நபர் குழு அமைக்குமாறும் அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளன.

அவர்களின் கோரிக்கையை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் இருப்பின், அவற்றை களைய, வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனாவின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும்.

அதன் அறிக்கையை வரும் 31.12.2009க்குள் அரசுக்கு அளிக்கும்பபடி முதல்வர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+