ஜார்க்கண்ட் - பாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு விலகல்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் உள்ள 21 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடனடியாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி இந்த விலகலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
இன்று சபாநாயகர் ஆலம்கீர் ஆலமை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் வழங்கினர்.
இவர்கள் தவிர கடந்த பாஜக கூட்டணி ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினரும் கூட ராஜினாமா செய்து விட்டார்.
கடந்த 2005ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சில உறுப்பினர்களின் ராஜினாமா, தகுதி நீக்கம், இடைத் தேர்தல் தோல்வி காரணமாக அது 21 ஆக குறைந்தது.
தற்போது பாஜக உறுப்பினர்களின் விலகல் காரணமாக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 42 ஆக குறைந்து விட்டது.
கடந்த ஜனவரி 19ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சிபு சோரன் விலகியதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமார் சட்டசபை இடைத் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சோரன் பதவி விலக நேரிட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications