வயலில் அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஹரியாணா முதல்வர் ஹெலிகாப்டர்!
டெல்லி: ஹரியாணா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாய் ஹிஸ்ஸார் பகுதியில் தரையிறக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியிருந்து முக்ட்சர் நகருக்கு அன்று பிற்பகல் பயணம் மேற்கொண்டார் ஹரியாணா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா.
ஆனால் ஹிஸ்ஸார் பகுதியை நெருங்கும்போது பலத்த மழை மற்றும் மிக மோசமான வானிலை இருந்ததைக் கண்ட விமானிகள் இருவரும் அங்கேயே தரையிறக்கிவிடலாம் என கூறினார். தொடர்ந்து ஹிஸ்ஸார் சாலையோர வயலில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து முதல்வரும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் பத்திரமாக காரில் டெல்லி திரும்பினர்.
மோசமான வானிலை காரணமாக சமீபத்தில் ஆந்திர முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவரது உயிரைக் குடித்தது நினைவிருக்கலாம். எனவே இப்போது அனைத்து மாநில முதல்வர்களுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications