முத்தூட் கொலை-நெல்லையில் சரணடைந்தோர் கேரள போலீஸாரிடம் ஒப்படைப்பு
நெல்லை: முத்தூட் அதிபர் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் கேரள போலீஸார் இன்று நீதிமன்றத்தின் அனுமதியுன் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
முத்தூட் நிதி நிறுவன அதிபர் மகன் பால் ஜார்ஜ் கடந்த மாதம் 22ம் தேதி ஆழப்புழை-சங்கனாச்சேரி பிரதான சாலையில் காரில் சென்றபோது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய 12 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான திருவனந்தபுரம் ஓகே நிவாஸ் பகுதியை சேர்ந்த ரவுடி ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி புத்தன்பாலம் ராஜேஷ் ஆகியோரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஓம்பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை நெல்லை குற்றவியல் 4ம் எண் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 11ம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்து அதன்பிறகு திருவனந்தபுரம் வாஞ்சியூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்ட திருவனந்தபுரம் துணை போலீஸ் கமிஷனர் ஜோலி செரியான், டிஎஸ்பி முகமது ஷாபி ஆகியோர் திருநெல்வேலி விரைந்தனர். அவர்கள் நெல்லை டிஐஜி கண்ணப்பன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் அதற்குள் கைதிகள் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் போலீஸ் அதிகாரிகள் ஏமாற்றுத்துடன் திருவனந்தபுரம் திரும்பினர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் வஞ்சியூர் போலீசார் நெல்லையில் சரணடைந்த ஓம்பிரகாஷ், ராஜேஷ் ஆகியோரை திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி திருவனந்தபுரம் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி சுஜாதா விசாரித்து இவர்கள் 2 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை நெல்லை வந்த கேரள போலீஸ் குழு, 4வது ஜேஎம் கோர்ட் நீதிபதியிடம் கேரள கோர்ட்டின் உத்தரவைக் காட்டினர். இதையடுத்து இரு கைதிகளையும் கேரளாவுக்கு அழைத்துச் செல்ல நெல்லை நீதிபதி அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறைக்கு விரைந்த கேரள போலீஸ், குழு ஓம்பிரகாஷ் மற்றும் ராஜேஷை பலத்த பாதுகாப்புடன் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications