இந்திய அணிக்கு கைகொடுத்த ஏர் இந்தியா!
சென்னை: ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் ஸ்டிரைக் காரணமாக சென்னையிலிருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானம் ஒன்றை இயக்கி அவர்களை கொழும்பு அழைத்துச் சென்றது.
ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெட் ஏர்வேஸ் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த ஸ்டிரைக் காரணமாக சென்னையிலிருந்து ஜெட் நிறுவனம் இயக்கும் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கொழும்புக்கான விமானம்.
இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டதால், அதில் செல்லவிருந்த பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
இதையடுத்து சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானத்தை இயக்கியது. சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பயணிகள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதே விமானத்தில், ஜெட் ஸ்டிரைக்கில் சிக்கி கொழும்பு செல்ல வேண்டிய இந்திய கிரிக்கெட் அணியினரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சிறப்பு கூடுதல் விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு சென்னைக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற பயணிகளுடன் பெங்களூர் சென்றது. அங்கு தங்கியிருந்த சில வீரர்களை ஏற்றிக் கொண்டு 12.45 மணிக்கு கொழும்பு சென்றது.
இந்த விமானத்தில் சச்சின், ராகுல் டிராவிட், கம்பீர், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், அமித் மிஸ்ரா, யூசுப் பதான், படேல், அபிஷேக் நாயர், திணேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும், பயிற்சியாளர்களான ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிர்ஸ்டன் ஆகியோரும் பயணித்தனர்.
மறு மார்க்கத்தில் 4 மணிக்கு இந்த விமானம் கொழும்பிலிருந்து கிளம்பியது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications