ராசிபுரம்-விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட்
ராசிபுரம்: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ராசிபுரம் இன்ஸ்பெக்டருக்கு சார்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் சின்னம்மாள் (57). இவர் கடந்த 2002 ல் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த பைக் சின்னம்மாள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சின்னம்மாள் படுகாயமடைந்தார். இதனால், தனக்கு இழப்பீடு கோரி சின்னம்மாள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் போலீசார் உரிய காலத்தில் சரியான முறையில் விசாரணை செய்யவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியனை சின்னம்மாள் தரப்பு சாட்சியாக சேர்த்தது.
அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சார்பு நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். ஆனால், ஒரு மாதம் ஆன நிலையிலும் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியனை ஆஜராகும்படி சார்பு நீதிபதி குணசேகரன் வாரண்ட் பிறப்பித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications