சமச்சீர் கல்வியை ஆதரியுங்கள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் திட்டமே சமச்சீர் கல்வித் திட்டம். இதை எதிர்க்காமல் ஆதரிக்க முன்வர வேண்டும் என கோரியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை..

சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் புதிய திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக் கல்வி வாரியம் ((State Board), மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம் (Matriculation Board), ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம் (Anglo Inidan Board), ஓரியண்டல் கல்வி வாரியம் (Oriental Board) ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக் கல்வி வாரியத்தை அமைத்திடவும்; இதுவரை நான்கு தனித்தனி வாரியங்களின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்திற்கும், ஒரு பொது பாடத்திட்டம், பொதுவான பாட நுhல்கள், பொதுவான தேர்வு முறை ஆகியவைகளை நடைமுறைப்படுத்திடவும், பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, அவற்றை அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய
வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்திடவும் தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பொதுப் பாடத்திட்டம் வகுப்பதற்கு முன்பாகவே, எந்தவகையான பாடத்திட்டம் வரப்போகிறது என்பது தெரியாமலேயே ஒரு பிரிவினர் சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும்; சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுக் குழப்பங்களை ஏற்படுத்துவதும் சரியான அணுகுமுறை ஆகாது என்பதால், அவ்வாறு எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் பயன்படும்வகையில், சமச்சீர் கல்வியின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தப்படுகின்றன.

சமச்சீர் கல்வியின் சிறப்பு அம்சங்கள் :

- சமச்சீர் கல்வி என்பது, இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல;

- ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் (Content)) பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம்சங்களைத் தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம்
உருவாக்கப்படும்.

- புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

- பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும் போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யயப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

- பாடத்திட்டம், பாடநூல்கள் குறித்து ஒளிவுமறைவின்றி (Transparent Method) பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

- தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளபடி, பயிற்றுமொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செடீய்யப்படும்.

இவ்வாறு, தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையில் - ஒரே சீராக வழங்கிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்திற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+