தூத்துக்குடியில் அண்ணா பல்கலை.யின் பொறியியல் கல்லூரி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நெல்லை அண்ணா பல்கலை கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி நேற்று தொடங்கப்பட்டது.
கல்லூரியைத் தொடங்கி வைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி, நெல்லை, கோவையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை கழகத்தின் சார்பில் அந்தந்த பகுதிகளில் தொழில்நுட்ப கல்லூரிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் புதிய பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள 341 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். கடந்த 2006ம் ஆண்டு வரை தமிழகத்தில் 9 அரசு தொழில் நுட்ப கல்லூரிகள் மட்டுமே இருந்தது.
திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11 தொழில் நுட்ப கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த பொறியியல் கல்லூரியில் அடுத்த ஆண்டு மெரைன் இன்ஜினியரிங் கோர்ஸ் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி முறையை பற்றி முழுமையாக தெரியாதவர்கள் அதனை எதிர்த்து வருகின்றனர். சமச்சீர் கல்வி முறையில் என்ன உள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
ஓரே கல்வி, ஓரே பாடத்திட்டம் இருந்தால்தான் கல்வியில் சமத்துவம் வரும். எதிர்ப்பு தெரிவிப்பதில் தவறில்லை. நன்கு புரிந்து கொண்டு பின்னர் எதிர்க்கலாம்.
கல்வியில் தென்மாவட்டங்களை விட வடபகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது என்றார் அவர்.
விழாவில் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், கீதா ஜீவன், அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் காளியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications