For Daily Alerts
Just In
தமிழகத்தில் அமையும் 3 மத்திய பல்கலைகள் - அமைச்சர்
நாகர்கோவில்: தமிழத்தில் புதிதாக 3 மத்திய பல்கலைக்கழகங்களைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
நாகர்கோவிலில் நேற்று அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதைத் திறந்து வைத்தார் அமைச்சர் பொன்முடி.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த ஆண்டு தமிழகத்தில் புதிதாக 3 மத்திய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.
கோவையில் உலகத் தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம், திருச்சியில், விவசாயப் பல்கலைக்கழகம், திருவாரூரில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் திறக்கப்படும்.
போதனை முறையில் ஆசிரியர்கள் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். நவீன உலகுக்கேற்ற முறையில் போதனை முறைகளை மாற்ற வேண்டும்.
கல்வித் துறையின் தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் முன்வர வேண்டும். அவர்களுக்கு அரசு எப்போதுமே உறுதுணையாக இருக்கும் என்றார்.