5.58 லட்சம் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சென்னையில் இதுதொடர்பாக இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி முதல் சைக்கிளை மாணவர் ஒருவருக்கு வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.
தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த மாணவர்கள் இதில் பயன் பெறுவார்கள். 132 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தாழ்த்ப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் கல்வி-ரூ. 900 கோடி நிதி:
இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி , கன்னியாகுமரி , விருதுநகர் ஆகிய 4 மாவட்ட தொடக்க கல்வி, பள்ளிக் கல்வி, மெட்ரிகுலேஷன் கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம், பாளையங்கோட்டையில் நடந்தது.
கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி, தொடக்க கல்வித் துறை இயக்குநர் தேவராஜன், மெட்ரிகுலேஷன் இயக்குநர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1.2 கோடி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்காக வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்து அறிக்கை அனுப்பப்பட உள்ளது என்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications