மகாத்மா காந்திதான் என் ஹீரோ-ஒபாமா

தலைநகர் வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக் கூட மாணவ, மாணவர்களிடையே பேசினார் ஒபாமா.
அப்போது 9வது வகுப்பு படிக்கும் மாணவி லில்லி என்பவர் எழுந்து, உயிருடன் இருக்கும் அல்லது இல்லாத ஒரு தலைவருடன் இரவு உணவு சாப்பிட நீங்கள் விரும்பினால், அந்தத் தலைவர் யார் என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஒபாமா, அது பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தியுடன் இரவு உணவு சாப்பிட விரும்புவேன். காரணம், அவர் உண்மையான ஹீரோ.
அவருடன் நான் கொஞ்சம்தான் சாப்பிடுவேன். காரணம், அவர் அதிகம் சாப்பிட மாட்டார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
எனக்கு முன்னால் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கையும் வசீகரித்தவர் காந்தி. எனவே இந்தியாவில் அகிம்சை முறையை காந்தியடிகள் போதித்திருக்காவிட்டால், அமெரிக்காவில் வன்முறை இல்லாமல் சிவில் உரிமைகளைப் பெறும் போராட்டத்தை லூதர் கிங் தொடங்கியிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
காந்தியடிகளிடம் உள்ள விசேஷம் என்னவென்றால் எந்தவிதமான ஆயுத பலமும் இல்லாமல், தனது கொள்கைகளால் மட்டும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். மக்கள் மனதை மாற்றினார், பலமாக்கினார்.
உங்களிடம் சக்தி மறைந்து கிடக்கிறது என்று கூறி மக்களை தட்டியெழுப்பினார். அந்த சக்தியைப் பயன்படுத்தினால் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்த முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
எனவேதான், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்புபவர்கள், மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். பண பலமோ, ஆயுத பலமோ, ஆள் பலமோ இல்லாமல், தங்களது தார்மீக கொள்கைகள், நெறிமுறைகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அப்படிப்பட்டவர்களுடன் நான் பேச அதிகம் ஆசைப்படுகிறேன் என்றார் ஒபாமா.
இந்த சந்திப்பின்போது பேசிய ஒபாமா கூகுள், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றைப் பாராட்டினார்.
ஒபாமா கூறுகையில், இன்று இங்கு மாணவர்களாக உட்கார்ந்திருக்கும் இடத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் ஒரு பெரும் பொருளாதார சீர்குலைவிலிருந்து மீண்டு வர உதவினார்கள். ஒரு உலகப் போரை வென்றார்கள்.
ஒரு மனிதரை நிலவுக்கு அனுப்பி வைத்தனர். சிவில் உரிமைகளுக்கான போரை நடத்தினார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மாணவர்களாக இருந்தவர்கள் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிநார்கள். ட்விட்டரை உருவாக்கினார்கள். பேஸ்புக்கை ஏற்படுத்தினார்கள். நமது தகவல் தொடர்பு முகத்தை முற்றிலும் மாற்றியமைத்தார்கள் என்றார் ஒபாமா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications