து.முதல்வர், அமைச்சர், காங். பதவி- ஜெகன் மோகனுக்கு காங். வாய்ப்பு

ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து அவரது இடத்தில் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியை நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால் மிகவும் சிறு வயதாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவியைத் தர காங். மேலிடம் விரும்பவில்லை. ஆந்திர மாநில மூத்த காங். தலைவர்களும் அதை விரும்பவில்லை.
இந்த நிலையில், ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும், ஜெகன் மோகன் கோஷ்டியின் தலைவர் போல செயல்பட்டு வருபவருமான கே.வி.பி. ராமச்சந்திர ராவை டெல்லிக்கு அழைத்தது கட்சி மேலிடம்.
முதல்வர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி எதிர்பார்க்க வேண்டாம். துணை முதல்வர் பதவி, மத்திய அமைச்சர் பதவி, மாநில கட்சியில் பதவி ஆகிய ஏதாவது ஒன்றை அவர் தேர்வு செய்யலாம் என்று அப்போது ராவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று ஹைதராபாத் திரும்புகிறார் ராவ். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து டெல்லியில் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை (இன்று) ஹைதராபாத்தில் அனைத்துக் கட்சி இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளப் போகிறேன். சனிக்கிழமை மீண்டும் டெல்லி திரும்புவேன் என்றார்.
இதற்கிடையே, ஜெகன் கோஷ்டியைச் சேர்ந்த 11 எம்.பிக்கள் நேற்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். அப்போது ஜெகன் மோகனை முதல்வராக்க வேண்டும் என்று பிரணாபிடம் வலியுறுத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications