டெல்லி பள்ளி நெரிசல் சாவுகள்: ஈவ்-டீசிங் காரணம்!
டெல்லி: டெல்லி அரசுப் பள்ளியில் 7 மாணவிகளி்ன் உயிர் பலியாகக் காரணம் மாணவர்களின் ஈவ்-டீசிங் தான் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக கஜூரிகான்ஸ் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறியதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 மாணவிகள் பலியானதாகக் கூறப்பட்டது.
ஆனால், இந்த நெரிசலுக்கு ஈவ்-டீசிங் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. காலையில் மாணவிகளுக்கும், பிற் பகல் முதல் மாணவர்களுக்கும் என இரண்டு ஷிப்டுகளாக இந்தப் பள்ளி இயங்குகிறது.
நேற்று பள்ளியில் தேர்வு நடந்ததால் மாணவர்கள், மாணவிகள் அனைவரும் காலை ஷிப்டிலேயே பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், கடும் மழையால் பள்ளியின் கீழ் தளத்தில் தண்ணீர் நுழைந்துவிட்டதால் மாணவர்களை முதல் மாடிக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.
அப்போது தேர்வை முடித்துவிட்டு மாணவிகள் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். இந் நிலையில் மாடிக்கு ஏறிய மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது மாணவிகள் தப்பியோடுகையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதில் தான் சம்பவ இடத்திலேயே 5 மாணவிகள் நெரிசலில் மிதிபட்டு பலியாயினர். 30க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இரு மாணவிகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்தப் பள்ளியில் ஈவ்-டீசிங் வழக்கமானது என்றும், அதைக் கட்டுப்படுத்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணவிகளின் பெற்றோர் புகார் கூறுகின்றனர்.
மேலும் 2 மாடிகளே கொண்ட இந்த சிறிய பள்ளியில் 2,000 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். இதனால் வழக்கமாகவே இங்கு கூட்ட நெரிசலும் அதிகம்.
இந் நிலையில் மாணவிகளை ஈவ்- டீசிங் செய்த மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications