உறுப்பினர் சேர்ப்பில் ஈடுபட்ட காங். பிரமுகரை உதைத்த திமுக நிர்வாகி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் பிரச்சனையில் காங்கிரஸ் பிரமுகருக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக திமுக செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுக்க பல லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், தூத்துக்குடி தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆறுமுகநேரி பகுதியில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கரநாராயணன் (36) இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர் திமுக உறுப்பினர்களை அதிக அளவில் காங்கிரஸில் சேர்த்ததாக கூறி ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ், மற்றும் எலிசா, சிவலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடித்து உதைத்தனர்.
இதில், படுகாயமடைந்த சங்கரநாராயணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சங்கரநாராயணை தாக்கிய, சுரேஷ், எலிசா, சிவலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications