திருச்சி அருகே பஸ்-சுமோ மோதல்: 4 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே இன்று காலை அரசு பேருந்து ஒன்று டாடா சுமோ மீது மோதியதில், சுமோவில் வந்த 4 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தவர் பாபு (37). இவருக்கு பாக்கியலட்சுமி (25) என்ற மனைவியும், 4 வயதான நவீன்குமார் என்ற மகனும் இருந்தனர்.
நேற்று பாபு, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாநல்லூரை சேர்ந்த பாலமுருகன் என்ற டிரைவருடன் டாடா சுமோ காரில் மதுரைக்கு கிளம்பினார். அவருடன் மனைவியும், மகனும் பயணம் செய்தனர்.
கார் இன்று காலை திருச்சி அருகே சமயபுரம் பகுதியில் 4 வழிச்சாலையில் தெற்கு நோக்கி செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று சரியான பாதையில் செல்லாமல், தவறுதலாக சுமோ வந்த ஒரு வழிப்பாதையில் வந்துள்ளது.
இதை சற்றும் எதிர்பாராத சுமோ டிரைவர் வண்டியை வேகமாக திருப்ப முயன்றார். ஆனால், அதற்குள் அந்த அரசு பேருந்து சுமோ மீதி மோதி அதை உருக்குலைய செய்துவிட்டது. சுமோவின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் சிறுவன் நவீன் குமாரை தவிர்த்து சுமோவில் வந்த மற்ற மூவரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள். சிறுவன் நவீன் குமார் திருச்சி மருத்துவமனையின் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சொகுசு பஸ் டிரைவர் சங்கரை கைத செய்தனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications