குமரி-ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது

Subscribe to Oneindia Tamil

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் மனவளங்குறிச்சி அருகேயுள்ள திருநயினார்குறிச்சையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருக்கும் கடியபட்டிணத்தை சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கும் நில பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் சுயம்புலிங்கம், மனவாளங்குறிச்சி போலீஸில் அவரது உறவினர் மீது புகார் செய்தார். இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து இருவருக்கும் பஞ்சாயத்து நடந்து முடிந்தது.

அப்போது மனவளங்குறிச்சி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சுப்பிரமணியம் என்பவர் சுயம்புலிங்கத்திடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுயம்புலிங்கம். அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தன்னால் ரூ. ஆயிரம் மட்டும் தர முடியும் என்றும், அதை வீட்டுக்கு போய் எடுத்து வருவதாகவும் கூறி சென்றார்.

ஆனால், அவர் நாகர்கோவில் லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி சுந்தராஜனை சந்தித்து புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் ரசாயன மருந்து தடவிய ரூ. 1000 ஆயிரத்தை கொண்டு சென்றார்.

அதை ஏட்டு சுப்பிரமணியத்திடம் கொடுத்தார். அப்போது அருகில் ஒழிந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏட்டை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+