புதுச்சேரி அரசு மேப்பில் காஷ்மீர் இல்லை - இந்து முன்னணி கண்டனம்
புதுச்சேரி: புதுச்சேரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச நோட்டு புத்தகத்தில் இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் அகற்றப்பட்டு, கார்கில் வரை மட்டுமே எல்லைகள் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் நான்கு லட்சம் நோட்டுகள், அரசு அச்சகத் துறை சார்பில் அச்சிடப்பட்டன.
இந்த நோட்டுகள், இரண்டு மாதத்திற்கு முன், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாணவர் பயிற்சி ஏட்டின் (அன் ரூல்டு) முன் அட்டையில், இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் அகற்றப்பட்டு, கார்கில் வரை மட்டுமே எல்லைகள் குறிப்பிடபட்டருந்தது.
புதுச்சேரி அரசின் இந்த செயலுக்கு புதுச்சேரி மாநில இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதையடுத்து, கல்வித்துறை, உடனடியாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் மாணவர்களுக்கு வழங்கிய அனைத்து இலவச நோட்டுகளையும் ஆசிரியர்கள் திரும்பப் பெற வேண்டும் , அதில், சரியான இந்திய வரைபடம் ஒட்டிய பிறகு, மாணவர்களிடம் வழங்க வேண்டும் எனக் உத்தரவிட்டருந்தது.
இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications