திண்டுக்கல் டாக்டர் கொலை-அடையாள அணிவகுப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் கொலையாளிகளை அடையாளம் காட்ட இன்றும் செப்டம்பர் 14 ம் தேதியும் சாட்சிகளுக்கு அடையாள அணி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது.
திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை பலர் பல இடங்களில் நேரில் பார்த்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க காண சாட்சிகள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று 11ம் தேதியும், வரும் 14 ம் தேதியும் திண்டுக்கல் கிளைச் சிறையில் அணி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
சாட்சிகளின் முன் இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக், அவரது காதலி மஞ்சு பார்கவி, உமர் முக்தார், சங்கர், சபீர் அகமது, ராஜ்குமார் ஆகியோர் நிறுத்தப்பட உள்ளனர்.
இதில் சபீர் அகமது, ராஜ்குமார் தற்போது சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ளனர். இன்று அணிவகுப்பு நடக்கவிருப்பதை அடுத்து அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த அடையாள அணிவகுப்பு திண்டுக்கல் ஜேஎம்1 மாஜிஸ்திரேட் கண்ணனின் நேரடி பார்வையில் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications