'வரலாறு தெரியாத ராகுல், அறியாமை ராகுல்'!

சென்னையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியிடம் தேசிய நதிகளை இணைக்கும் திட்டம், பேப்பரில் மட்டும்தான் உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய நதிகளை இணைப்பது என்பது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் யோசனையாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது இந்த நாட்டின் சுற்றுப்புற சூழலை மிகவும் ஆபத்தான பாதைக்கு கொண்டு செல்லும் திட்டமாகும். இந்தத் திட்டத்தை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்க மாட்டேன். இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்லதல்ல என்றார்.
ஆனால், உங்கள் கூட்டணியில் உள்ள முதல்வர் கருணாநிதி, இத் திட்டத்தை வலியுறுத்துகிறாரே என்று சுட்டிக் காட்டியபோது, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பதிலளித்தார் ராகுல்.
மேலும் நீர்ப்பாசனத்துக்காக உள்ளூர் நதிகளை இணைப்பது தவறல்ல. ஆனால் தேசிய அளவில் பெரிய நதிகளை இணைப்பது ஆபத்தானது என்றார்.
ராகுலின் இந்தக் கருத்துக்கு தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
தேசிய நதிகளை இணைப்பது மிக அவசியமானது. பல நிபுணர்களும் ஆய்வு செய்து தான் தேசிய நதிகளை இணைக்கலாம் என்று கூறியுள்ளனர். நதிகள் இணைப்பு பல நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் ராகுல் காந்தி அறியாமையால் பேசுகிறார் என்றார்.
வரலாறு தெரியாத ராகுல்-வைகோ:
ராகுலின் பேச்சு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
நதி நீர் இணைப்புத் திட்டம் என்பது நேரு காலத்திலேயே துவங்கப்பட்டது; முன்னாள் பிரதமர் இந்திரா காலத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாறு தெரியாமல் பேசும் ராகுலின் பேச்சு வேடிக்கையாக உள்ளது.
இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக ராகுல் கூறியது முற்றிலும் தவறான தகவல் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications