'தீவிரவாத மையமாகும் மாலத்தீவு'-அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

Maldives
வாஷிங்டன்: குட்டித் தீவான மாலத்தீவு எதிர்காலத்தில் தீவிரவாதிகளின் மையமாக மாறக் கூடிய அபாயம் உள்ளதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.

அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மாலத்தீவில் புகுந்து அங்கிருந்தபடி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாகவும் அமெரிக்கா கருதுகிறது.

இதையடுத்து கடந்த 7ம் தேதி அதிபர் பாரக் ஒபாமா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அமெரிக்க அரசின் ஆயுத கட்டுப்பாட்டு ஏற்றுமதி சட்டம் மற்றும் வெளிநாட்டு உதவி சட்டம் ஆகியவற்றின் கீழ் மாலத்தீவுக்கு பாதுகாப்பு தளவாட உதவிகளைச் செய்ய முடியுமா என்று கேட்கப்பட்டுள்ளது.

மாலத்தீவுக்கு பாதுகாப்பு சாதனங்களை (ஆயுதங்கள்) அளிப்பதன் மூலம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடலாம் என அமெரிக்கா கருதுகிறது.

மாலத்தீவில் அமெரிக்க பாதுகாப்பு இருப்பை நிலைப்படுத்தினால், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எளிதில் சமாளிக்க முடியும். மாலத்தீவுக்குள் தீவிரவாத ஊடுறுவலை தடுக்க முடியும் என ஒபாமா கருதுகிறார்.

தற்போது மாலத்தீவுகளுக்குள் தீவிரவாதிகள் நிலை கொள்ளவில்லை என்றாலும் கூட மாலத்தீவு வழியாக தீவிரவாதிகள் பிற பகுதிகளுக்குப் போய் வருவது நடந்து வருகிறது. எனவே ஒரு கட்டத்தில் மாலத்தீவுகளை ஒரு மையமாக தீவிரவாதிகள் மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.

மேலும், மாலத்தீவு பல்வேறு குட்டிக் குட்டித் தீவுகளை உள்ளடக்கியதாக உள்ளதால் அவற்றைக் கண்காணிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமான விஷயமாகும். இதுவும் அமெரிக்காவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

எனவே தங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ள தீவுகள் அனைத்தையும் கண்காணிக்கும் வசதியை மாலத்தீவு அரசு பெற வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது.

மாலத்தீவுக்கு இதுதவிர வேறு வகையிலும் உதவ அமெரிக்கா கருதுகிறது. இதுதொடர்பாக இதுவரை அமெரிக்க அரசுத் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

இதற்கிடையே, மாலத்தீவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் இருப்பதாக இந்திய உளவு அமைப்புகளும் கூறுகின்றன.

மாலத்தீவுகளை ஒரு மையமாக பயன்படுத்துவது குறித்து லஷ்கர் இ தொய்பா அமைப்பு முன்பே திட்டமிட்டதாம். சமீபத்தில் லஷ்கருடன் அல் கொய்தா மற்றும் ஜெய்ஸ் இ முகம்மது ஆகிய தீவிரவாத அமைப்புகளும் கை கோர்த்துள்ளதாக தெரிகிறது.

இந்த மூன்று அமைப்புகளும் சேர்ந்து மாலத்தீவில் மிகப் பெரிய தீவிரவாத தளத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் தெரிகிரது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் தலைமைப் பொறுப்புகளை வைத்துக் கொண்டு மாலத்தீவில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை நிலை கொண்டிருக்க வைப்பதுதான் இந்த மூன்று தீவிரவாத அமைப்புகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த 500 மத குருக்கள் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனராம். இவர்கள் தீவிரவாதம் குறித்த போதனையை அங்கு பரப்புவார்கள் எனத் தெரிகிறது.

மாலத்தீவில் தீவிரவாத செயல்களுக்கு ஆட்களைப் பிடித்து அடிப்படையான தீவிரவாத போதனையை அவர்களுக்குக் கொடுத்து பின்னர் பாகிஸ்தானுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ அனுப்பி வைத்து தீவிரவாத ஆயுதப் பயிற்சியை அளிக்கும் திட்டத்தையும் சத்தம் போடாமல் லஷ்கர் உள்ளிட்ட அமைப்புகள் செய்து வருவதாக தெரிகிறது.

மாலத்தீவுக்குள் கால் வைத்த முதல் தீவிரவாத அமைப்பு லஷ்கர்தானாம். ஏற்கனவே அங்கு கிட்டத்தட்ட 100 தீவுகளில் தனது தீவிரவாதிகளை ஊடுறுவ வைத்துள்ளதாம் லஷ்கர்.

சுனாமி தாக்கியபோது, நிவாரணப் பணிகளுக்கு வருவதாக கூறி இதாரா கித்மத் இ கல்க் என்ற தொண்டு நிறுவனத்தின் பெயரில் உள்ளே நுழைந்துள்ளதாம் லஷ்கர்.

லஷ்கர் அமைப்பு நடத்தும் தொண்டு நிறுவனம் இது. இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம்தான் மாலத்தீவில் தனது ஆதிக்கத்தை புகுத்தியதாம் லஷ்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+