தமிழர்களின் அவல நிலை-பொறுமை இழக்கிறது ஐ.நா

Subscribe to Oneindia Tamil

Tamils in Sri Lanka camp
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தொடர்ந்து மாணிக் பார்ம் முகாமுக்கு நிதியுதவி செய்வது இயலாத காரியம என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே மாதத்தில் விடுதலைப் புலிகளுடான போரை முடித்தது இலங்கை. அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை திறந்த வெளி கொட்டடியில் அகதிகள் என்ற பெயரில், முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு.

அவர்களுக்குள் இருக்கும் விடுதலைப் புலிகளைப் பிடிக்கிறோம் என்று கூறிக் கொண்டு யாரையும் வெளியேற விடாமல் இம்சித்து வருகிறது இலங்கை அரசு.

இந்த நிலையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இனியும் முகாம்களுக்கான நிதியுதவி தொடருவது சிரமம் என்று ஐ.நா. கூறியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் இலங்கைப் பிரிவு தலைவர் நீல் பூனே கூறுகையில், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவரவர் இடங்களுக்கு அனுப்பி வைப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

வேறு எங்கும் போக இயலாதவர்கள் வேண்டுமானால் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தி்ல தங்க முடியும். மற்றவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதே நல்லது.

கிட்டத்தட்ட 10 ஆயிரம் தமிழர்களை இலங்கைப் படையினர் பிரித்து தனித்து வைத்துள்ளனர். அவர்களைப் பார்க்க செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதால் பார்க்க அனுமதிக்க இயலாது என அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் முகாம்களுக்கு அருகே கைது செய்யப்பட்ட இரு ஐ.நா. பணியாளர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது கவலை அளிப்பதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் நியூயார்க்கில் தெரிவிததார்.

உலக வங்கி 75 மில்லியன் டாலர் உதவி:

இதற்கிடையே, இலங்கைக்கு 75 மில்லியன் டாலர் நிதியுதவியை அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் சிங்கள மாகாணங்களான உவா, தெற்கு மற்றும் சபரகமுவா ஆகிய மாகாணங்களில் உள்ள ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதியைப் பயன்படுத்தப் போகிறதாம் இலங்கை அரசு.

கெமி திரியா என்ற பெயரில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இந்தத் திட்டம் ஏற்கனவே 1000க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+