தங்கை காதலால் ஆத்திரம்-விஷம் தந்து வாலிபரை கொன்ற ராணுவ வீரர்
நெல்லை: நெல்லை அருகே இளம் பெண்ணை காதலித்தவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 4 பேர் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
மானூர் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் களக்குடியை சேர்ந்த கோமுவின் மகளை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வெறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆததிரமடைந்த கோமுவின் மகன் ராணுவ வீரரான மாரியப்பன், தாய்மாமா அய்யாத்துரை உள்பட 5 பேர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஆறுமுகத்திற்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தனர்.
பின்னர் ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரப்பினர்.
ஆனால், இந்த சாவில் சந்தேகமடைந்த ஆறுமுகத்தின் உறவினர்களில் சிலர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் டிஎஸ்பி நாகராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி, எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தி அய்யாத்துரை, மாரியப்பன், இவரது நண்பர்கள் கந்தசாமி, சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் பல தற்கொலை வழக்குகள் மறுவிசாரணை செய்யப்பட்டு அதில் 5 வழக்குகள் கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எஸ்பி ஆஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது போன்று சீவலப்பேரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், விக்கிரமசிங்கபுரம், ஆகிய பகுதிகளில் நடந்த தற்கொலைகளை மறு விசாரணை நடத்தி 5 கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications