ரூ. 3.5 லட்சம் லஞ்சத்துடன் மெட்ரோ வாட்டர் அதிகாரி கைது
சென்னை: தமிழகம் முழுவதும் வசூலித்த லஞ்சப் பணத்தை கொட்டி பெட்டியில் அள்ளியபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய என்ஜீனியரிங் இயக்குநர் கையும் களவுமாக பிடிபட்டார்.
என்ஜீனியரிங் இயக்குநர் என்ற பதவி, கிட்டத்தட்ட, பொதுப் பணித்துறையில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவியைப் போன்றதாகவும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பெருமளவில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், மாதா மாதம் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தின்போது லஞ்சப் பணத்தைக் கொண்டு வந்து சமர்ப்பிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் போனது.
நேற்று இந்த அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை கண்காணித்து திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
எஸ்.பி. பவானீஸ்வரி மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் நேற்று மாலையில் இந்த கூட்டம் நடக்கும் போது சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் பைகளில் கொண்டு வந்திருந்த லஞ்ச பணத்தை கொட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீர் என்று புகுந்த போலீசார், அதிகாரிகள் கொட்டிய பணத்தை எல்லாம் வாரி அள்ளி சூட்கேஸ் பெட்டியில் போட்டார்கள். இதைத் தொடர்ந்து அங்கு இரவு 8 மணி வரை சோதனை நடந்தது.
லஞ்ச பணத்தை பைகளில் கொண்டு வந்து கொட்டிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் என்ஜினீயரிங் இயக்குனர் குமரேசனுக்கு (56) லஞ்ச பணத்தைக் கொண்டு வந்ததாக சிலர் கூறினார்கள். சிலர் எதுவும் பேச மறுத்தனர்.
லஞ்ச பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ. மூன்றரை லட்சம் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் என்ஜினீயரிங் இயக்குனர் குமரேசனிடம் விசாரணை நடந்தது. இதில், குற்றத்தை ஒப்புக் கொள்ள அவர் மறுத்தார். இருந்தாலும், சில அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமரேசனை நேற்றிரவு 8 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications