கஜகஸ்தான் மருத்துவமனையில் தீ-38 பேர் பலி
அல்மாட்டி: கஜ்கஸ்தான் நாட்டின் டால்டிகோர்கன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 38 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் நடந்த மருத்துவமனையில் சுமார் 40 போதை பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள், புது வாழ்க்கை பெற தங்கியிருந்தனர். அவர்களில் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக தெரிகிறது.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து கஜகஸ்தான் பிரதமர் கரீம் மஷிமோவ் இந்த விபத்து குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இப்பகுதிக்கு ஒபியம், ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துகள் கடத்தப்படுகின்றன. மேலும், அந்நாட்டிலே கேன்னபிஸ் என்ற போதை பொருள் அதிகம் பயிரிடப்படுகிறது.
இதனால் சுமார் 1.6 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் சுமார் 55 ஆயிரம் போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அரசு போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications