வெனிசுலாவில் கடும் நிலநடுக்கம்-வீடுகள் தரைமட்டமானது
கராஹஸ்: வெனிசுலா நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை சுமார் 1.40 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உணரப்பட்ட இது பால்கான் மாகாணத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அவசர சேவை பிரிவு தலைவர் லூயிஸ் டையாஸ் குர்பெலோ கூறுகையில்,
பால்கான் மாகாணத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்கிசில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தால் அலறியடித்து கொண்டு வீதிக்கு வந்தனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 7 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் கராஹஸில் இருந்தவர்களும் அலறியடித்து கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி, தெருவில் வந்து நின்றனர். அவர்கள் அனைவரும் பல மணி நேரத்துக்கு வெளியிலே நின்றுவிட்டனர். பீதி மறைய நெடுநேரம் ஆனது என்றார்.
புயூர்டோ கேபெலோ நகருக்கு சுமார் 23 மேல் வடகிழக்கில், 6.2 மைல் கடல் ஆழத்தில் இது மையமிட்டதாக தெரிகிறது.
தப்பியது பெட்ரோல் நிறுவனம்...
தென் அமெரிக்கா நாடான வெனிசுலா எண்ணெய் வளம் நிறைந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அந்நாட்டின் பரபலமான எல் பாலிடோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் அந்த நிறுவனத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications