திருவண்ணாமலை-இடிதாக்கி யாகம் செய்த 4 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பர்வத மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு யாகம் வளர்க்க சென்ற 4 பேர் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான அந்த நான்கு பேர் கொருக்குப்பேட்டை ஆனந்தராஜ்(48), ராஜ் (56), கொடுங்கையூர் கஜபதி (60), கொட்டிவாக்கம் பூபாலன் (27) என தெரியவந்துள்ளது.
இந்த மலைகோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தானவை என்பதால் ஏறுவது, இறங்குவது கடினம். இதனால் இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் விடிந்தவுடன் ஏறி, அந்தி சாயும் முன் இறங்குவது கடினம். அப்படி இயலாதவர்கள் கோவில் மண்டபத்திலே தங்கிவிடுகின்றனர்.
இவர்கள் நேற்று கொடுங்கையூரில் இருந்து ஒரு வேனில் மூலம் திருவண்ணாமலை வந்துள்ளனர். அதேபோல் திருவல்லிக்கேணியை சேர்ந்த 5 பேரும் டாடா சுமோ ஒன்றில் வந்துள்ளனர். யாகம் வளர்க்க தாமதமாக வந்த இவர்கள் மாலை வேளையில் மலை ஏறியதால் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களுடன் மேலும் பலரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ஒரு இடி எதிர்பாராத வகையில் கோபுரத்தின் கலசத்தில் விழுந்தது.
இதில் அந்த கலசம் உடைந்து கீழே படுத்திருந்த நான்கு பேர் மீது விழுந்து, அவர்கள் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் உயிர் பிழைத்தனர்.
இறைவனை வணங்க வந்த இடத்தில் நேர்ந்த இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications