திருச்சியில் நாளை மதிமுக மண்டல மாநாடு
திருச்சி: மதிமுகவின் மண்டல மாநாடு நாளை திருச்சியில் நடக்கிறது. இதில் கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் அதன் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி- அண்ணாநகர் வீர.இளவரசன் அரங்கில் நாளை பிற்பகல் 3 மணி அளவில் பேரறிஞர் அண்ணா நிறைவு விழா மற்றும் திருச்சி மண்டல மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு மலர்மன்னன் தலைமையேற்க, மண்ணச்சநல்லூர் நடராஜன் மாநாட்டை துவக்கி வைக்கிறார். புதுக்கோட்டை டாக்டர் சந்திரசேகரன் வரவேற்புரையாற்ற, வழக்கறிஞர் அரியலூர் சின்னப்பா கழகக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
'அறிஞர் அண்ணா' சுடரை ஷேக்முகமது ஏற்றிவைக்க அறிஞர் அண்ணா ஓவியக் கண்காட்சியை தமிழ்மாறன் திறந்து வைக்கிறார்.
மாநாட்டில் திராவிட இயக்கத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்பில் தர்மலிங்கம், மொழிப்போர் தியாகிகள், ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த தியாகிகள், தீக்குளித்த மதிமுக தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.
ஓ.பி. வாழ்த்துரை:
இம்மாநாட்டில் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார். அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்குகிறார்.
மதிமுக பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் துரைசாமி, கணேசமூர்த்தி, எம்பி, கலைப்புலி எஸ்.தாணு, செந்திலதிபன், அழகுசுந்தரம் மற்றும் முன்னணியினர் உரையாற்றுகின்றனர்.
வெல்லமண்டி சோமு நன்றியுரை ஆற்றுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
