தீபாவளி- சென்னையிலிருந்து 500 சிறப்பு பஸ்கள்

சென்னையில் இருந்து தினமும் 900 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந் நிலையில் அக்டோபர் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இதர போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து 300 'அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்களை பெற்று இயக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, சேலம், பெங்களூர், நாமக்கல், மன்னார்குடி நாகப்பட்டினம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவுப்போக்குவரத்து கழக பஸ்களுக்கு ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் நாளை (16ம் தேதி) முதல் இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
மேலும் இந்த பஸ்களுக்கான முன் பதிவை சென்னை கோயம்பேடு, தியாகராயநகர், தாம்பரம், பிராட்வே பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் செய்யலாம்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 24794709, 24794705 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட 43 முகவர்களிடமும் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 350 பஸ்களும் மற்றும் சேலம், கோவை, மதுரை கோட்டங்களில் மொத்தம் 150 பஸ்கள் வீதம் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications