மதிமுக மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்-வைகோ
திருச்சி: திருச்சியில் இன்று நடக்கும் மதிமுக மண்டல மாநாடு நிச்சயமாக திருப்புமுனை ஏற்படுத்தும், இளைஞர்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி- அண்ணாநகர் வீர.இளவரசன் அரங்கில் இன்று பேரறிஞர் அண்ணா நிறைவு விழா மற்றும் திருச்சி மண்டல மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்குகிறார்.
மாநாட்டையொட்டி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் மலைக்கோட்டை போன்ற மாநாட்டு மேடையும், கப்பல் வடிவத்தில் கொடிக்கம்ப மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா சிலைக்கு மாலை..
மாநாட்டு மேடையில் உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
திருச்சி மண்டல மாநாட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்புவதாக கூறியிருக்கிறார்.
மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த மாநாடு நிச்சயமாக திருப்புமுனை ஏற்படுத்தும். இளைஞர்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தும்.
அண்ணாவின் கொள்கைகள், லட்சியங்களை இளம் தலைமுறையினர், மாணவர்களுக்கு எடுத்து சொல்வது தான் எங்கள் நோக்கம். அதனால் தான் அண்ணாவின் பொன்மொழிகளை திருச்சி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தி இருக்கிறோம்.
தேர்தல் தோல்வி பற்றி மதிமுக கவலைப்படாமல் அண்ணாவின் கொள்கைகள் கருத்துக்களை நிறைவேற்றுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. அண்ணாவின் கருத்துக்களை இன்னும் அதிகமாக எடுத்துச்சொல்ல இருக்கிறோம் என்றார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications