தீபாவளிக்கு ஏன் சிறப்பு ரயி்ல்கள் இல்லை?
சென்னை: மலையாள அதிகாரிகளின் கைகளில் சி்க்கித் தவித்து வரும் தெற்கு ரயில்வே இந்த ஆண்டு தீபாபளிப் பண்டிகையை முன்னிட்டு இதுவரை சிறப்பு ரயில்கள் எதையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.
வழக்கமாக தீபாவளிக்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன் பதிவு செய்ய வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவிக்கும்.
இதற்கான சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒட்டப்படும். தெற்கு ரயில்வேயின் இணையதளத்திலும் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும்.
ஆனால், இம்முறை சிறப்பு ரயில்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையி்ல் தென்னக ரயில்வே ஆழ்ந்த அமைதி காத்து வருகிறது.
அதே நேரத்தில் சென்னை- நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஓணம் சிறப்பு ரயில்களை மேலும் சில நாள்களுக்கு நீட்டித்துள்ளனர் மலையாள அதிகாரிகள்.
நவராத்திரிக்கெல்லாம் சிறப்பு ரயில்களை அறிவித்த தென்னக ரயில்வே தீபாவளியை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications