பெண் மீது வாலிபர் துப்பாக்கி சூடு
வேலூர்: வேலூரில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த பெண்ணின் பெயர் உஷா (19). இவர் வேலூர் மாவட்டம் ஜமுனாமரத்தூர் பெருங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள்.
இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் தாமோதரன் பல நாட்களாக காதல் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த உஷாவிடம் அவர் வம்பு செய்துள்ளார். தனது இச்சைக்கு இணங்கும்படி அவரை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார். மேலும், சத்தம் போட்டு அருகிலிருப்பவர்களை அழைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த காட்டு விலங்குகளை வோட்டையாட பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கியை எடுத்து, அந்த பெண்ணை நோக்கி தாறுமாறாக சுட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்து, வேதனையால் அலறி துடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான தாமோதரனை தேடி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications