ஆஸி-3 இந்தியர்கள் மீது 70 பேர் கும்பல் மீண்டும் தாக்குதல்

அவர்கள் சுக்தீப் சிங்(26), அவரது சகோதரர் குர்தீர் சிங் மற்றும் அவரது உறவினர் முக்தையர் சிங் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் மூவரும் மெல்போர்னின் கிழக்கு பகுதியான எப்பிங்கில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது கடந்த 12ம் தேதி சில ஆஸ்திரேலியர்களால் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காயமடைந்தவர்களின் உறவினரான ஆன்கர் சிங் கூறுகையில்,
அவர்கள் மூவரும் அன்று காலை 11.00 மணி அளவில் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட 70 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளது.
அவர்கள் அமைதியாக தான் விளையாடியுள்ளனர். ஆனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை கேலி செய்து வம்புக்கு இழுத்துள்ளனர். அப்போது அவர்கள் பொறுமையாக இருந்துள்ளனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை பார்த்து உங்கள் நாட்டுக்கு ஓடி போ என கூறியுள்ளனர். அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு காரில் செல்ல முயன்ற போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.
அவர்கள் 13 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இந்த விஷயம் தொடர்பாக அந்த 70 பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மாதம் ஆஸ்திரேலிய அரசு பிரதிநிதிகள் இந்தியா வந்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணாவை சந்தித்தனர். அப்போது இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இனவெறி தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications