அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு டாக்டர்கள் தங்க மோதிரம்!!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுமார் 100 ஆண்டு பழமைவாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாக பெண் மகப்பெறு டாக்டர்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து அருகிலுள்ள சுமார் 25 கிராமத்தை சேர்ந்த மக்கள் பிரசவத்துக்கு தென்காசி சென்று வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த மருத்துவமனைக்கு புதிதாக மகப்பெறு பெண் டாக்டர் ஒருவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், இங்கு யாரும் பிரசவத்துக்கு வரவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல் உடைக்கும் தொழிலாளி குருவாயூரப்பன் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு பெண் மருத்துவர் சுகம், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆபரேசன் மூலம் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் சுப்புலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் இந்த மருத்துவமனையில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளதால் அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தங்கள் சொந்த செலவில் தங்க மோதிரம் வாங்கி அணிவித்தனர்.
மேலும் குழந்தைக்கு தேவையான ஆடைகளும், மருத்துமனை ஊழியர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மருத்துவர்களின் இந்த முயற்சியால் இப்போது மருத்துமனைக்கு பிரசவத்துக்கு வரும் பெண்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications